வரும் புதுவருடம் 2021 முதல் நிகழ்ச்சியாக தைப் பொங்கல் திருவிழா ஜனவரி 17ம் தேதி, இணையவழியில் கொண்டாட உள்ளோம்.
மங்கள நாதஸ்வர இசை மற்றும் நாதஸ்வர இசையில் தமிழ் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்க, நம் நியூ ஜெர்சி இசை ஆசிரியர்களின் பயிற்சி பெற்ற குழந்தைகளின் தமிழிசைப் பாடல்கள், மற்றும் உலக அரங்கில் பிரபலமான கல்யாணமாலை பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.