தமிழ்ப் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை (சித்திரைத் திருவிழா சிறப்பு நிகழ்வு )
நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 15, 2023
நேரம்: நண்பகல் 2:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
இடம்: Franklin High School, Somerset, NJ
சிறப்பு விருந்தினர்கள்:
திரு. மாலன் நாராயணன், எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
முனைவர். திரு. வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பேராசிரியர் பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
2021 ஆம் ஆண்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடத்திய மாநிலத்தின் முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் அளித்த வரவேற்பின் உற்சாகத்தில், தொடர்ந்து இந்த ஆண்டும் சங்க இலக்கியங்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், சாகித்திய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், சிறுவர்களுக்கான கதைகள் என்று முந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!