நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் குழந்தைகள் பேச்சுப் போட்டி :
********
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams-FeTNA) மேடைப்பேச்சுக்கான நாடுதழுவிய களங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அமைத்து, இளையோரின் தமிழ் மேடைப் பேச்சுத் திறனை வளர்க்க மற்றும் ஊக்குவிக்க ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தப் போட்டி வெவ்வேறு நிலைகளில் நடைபெற உள்ளது. அந்த களத்தில், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கீழேயுள்ள இணைப்பில் உங்கள் விவரத்தைப் பதிவிடவும்.
விதிமுறைகள்
குழந்தைகள் பேச்சுப் போட்டி விதிமுறைகள்:
1. போட்டியில் வெற்றி பெறுபவர்கள், கொரோனா கால நிலைமை சரியாகி விட்டால் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதியாகச் செப்டம்பர் மாதம் அட்லாண்டா நகரில் நடக்க இருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழாவிற்கு நேரில் சென்று இறுதிச் சுற்றில் பங்கு பெற வேண்டும்.
2. போட்டியில் பங்கு பெற விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 01/31
3. இரண்டு பிரிவில் பேச்சுப்போட்டி நடக்கும். ஜூனியர் மற்றும் சீனியர்.
4. ஜூனியர்: 10 வயது நிரம்பியவர்கள் முதல் – 14 வயது நடப்பில் உள்ளவர் வரை (2021 ஜனவரி 1 அன்று )
பிறந்த தேதி: 1 ஜனவரி 2007 முதல் 31 டிசம்பர் 2010 வரை பிறந்தவர்கள்
5. சீனியர்: 14 வயது நிரம்பியவர்கள் முதல் – 21 வயது நடப்பில் உள்ளவர் வரை (2021 ஜனவரி 1 அன்று )
பிறந்த தேதி: 1 ஜனவரி 2000 முதல் 31 டிசம்பர் 2006 வரை பிறந்தவர்கள்
6. நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் பேச்சுப் போட்டியில், இரண்டு பிரிவிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இரண்டு மாணவர்கள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் போட்டிக்கு அனுப்பப்படுவர்.
7. நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் பேச்சுப் போட்டியின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
8. இறுதிச் சுற்றின் போது அவர்கள் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக இல்லாமல் இருந்தால், கட்டணம் அளித்து நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக வேண்டியது அவசியம்.
9. இந்த நிகழ்ச்சியில் நியூஜெர்சி குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
10. தமிழ்ப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தால் போதுமானது.